Add your E-mail address to receive updates

Enter your email address:

Delivered by FeedBurner

Google Buzz என்றால் என்ன?  

Posted by www.acscomputercenter.blogspot.com

கூகிள் பற்றிய முன்னுரை கொடுக்கக்கூடிய அளவில் கூகிள் இல்லை என்பதால் நேராக விசயத்திற்கு வருகிறேன். கூகிள் பல பல புதிய வசதிகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருவது உங்கள் அனைவருக்கும் தெரிந்தது. அதில் சமீபத்திய அறிமுகமான Google Buzz பற்றிய செய்திகள் மற்றும் என் பார்வை தான் இந்த இடுகை.

இணைய உலகில் பெரும்பாலான விசயங்களில் கூகிள் முன்னணியில் இருந்தாலும் சமூக வலையமைப்பு தளங்களான Facebook, Twitter வளர்ச்சி கூகுளை உறுத்திக்கொண்டே இருந்தது ஆர்குட் என்ற பிரபலமான சேவையை தன் வசம் வைத்து இருந்தும். முன்பு Facebook Twitter தளங்கள் மேலை நாடுகளில் தான் பிரபலமாக இருந்தது ஆனால் தற்போது குறிப்பிடத்தக்க இணைய சந்தையான இந்தியாவிலும் அதிகம் இவற்றை பயன்படுத்த ஆரம்பித்து விட்டனர், எனவே அந்த விசயத்தில் நாம் பின் தங்கிவிடக்கூடாது என்பதற்காக கூகிள் ஆரம்பித்தது தான் இந்த Google Buzz.

கூகிள் மின்னஞ்சலை துவங்கிய போது இருந்தே திறமையான ஒரு மார்க்கெட்டிங் முறையை பயன்படுத்தி வருகிறது, அதாவது அழைப்பு இருந்தால் மட்டுமே முதலில் பயன்படுத்த முடியும். கூகிள் மின்னஞ்சல் துவங்கப்பட்ட போது அழைப்புக்காக மற்றவர்களிடம் வேண்டியவர்கள் அதிகம், இவ்வாறு இதன் மீதான எதிர்பார்ப்பை கூட்டி விடுகிறது. அதே போல Google Buzz க்கும் இதே போல எடுத்தவுடன் அனைவருக்கும் இந்த வசதியை கொடுத்து விடவில்லை , சிலருக்கு கொஞ்சம் காக்க வைத்து கொடுத்தது. ஃபிகர் உடனே பிக்கப் ஆனா ஒரு த்ரில் இருக்காது அது மாதிரி தான் ;-)

Google Buzz பயன் என்ன?

நம்மோட எண்ணங்களை நம்மை பற்றிய செய்திகளை நம் நண்பர்களுடன் எளிதாக பகிர்ந்து கொள்ள உதவும் ஒரு இடம். இங்கே எதை வேண்டும் என்றாலும் பகிர்ந்து கொள்ளலாம் படங்கள் வீடியோ உட்பட, அதற்க்கு நம்மை பின் தொடர்பவர்கள் அதில் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்வார்கள். உலகில் நடக்கும் அனைத்து செய்திகளையும் இதில் நாம் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் காஃபி, சாப்பாடு சாப்பிட்டேன், தூங்கிட்டு இருந்தேன் என்கிற அளவில் அனைத்தையும் எழுதிக் கொண்டுள்ளார்கள்.

Google Buzz பற்றிய சில செய்திகள்

Google Buzz முதலில் துவங்கிய போது ஒருவர் அதிகளவில் தொடர்பில் உள்ளவர்கள் (மின்னஞ்சல் மற்றும் உரையாடி[chat]) மின்னஞ்சல் முகவரிகளை அதுவே பின்தொடருபவராக ஏற்படுத்தி விட்டது. இதற்கு அனைவரிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதெப்படி என்னோட அனுமதி இல்லாமல் இதை நீங்கள் செய்யலாம்? என்று. கூகிள் எப்போதும் ஒன்றை துவங்கியவுடன் அதோடு நின்றுவிடுவதில்லை அதில் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் நிவர்த்தி செய்து விடுகிறது. இதையும் காலம் தாழ்த்தாமல் இரண்டே நாட்களில் சரி செய்தது.

Google Buzz கூகிள் மின்னஞ்சல் உள்ளே ஒரு லேபிளாக வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே இதற்காக வேறு தளம் செல்ல வேண்டியதில்லை. இதை சொடுக்குவதன் மூலம் நாம் எளிதாக பயன்படுத்த முடியும்.

இதில் Twitter போல எழுத்துக்களுக்கு கட்டுப்பாடு இல்லை

இதில் நமது தொலைபேசியில் உள்ள படங்களை தொலைபேசியில் இருந்தே buzz@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புவதன் மூலமும் உங்கள் செய்தியை மற்றவர்களுடன் பகிரலாம், இந்தப்படங்கள் பிக்காசாவில் சேமிக்கப்படும். (இதை யார் யார் பார்க்க அனுமதி என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்)

மற்ற தளங்களை போலவே இதிலும் உங்களுக்கு யாராவது பின் தொடருவது பிடிக்கவில்லை என்றால் அவரை தடை செய்யலாம்.

குறிப்பிட்ட விஷயத்தை ஒரு தலைப்பில் பலருடன் விவாதித்து இருக்கிறீர்கள் அதை (மொத்த உரையாடலையும்) நீங்கள் இன்னொருவருக்கு அனுப்ப விரும்பினால் அதை மின்னஞ்சல் செய்யலாம்.

Google Apps மூலமாக நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு மேலும் வசதிகளுடன் விரைவில் இந்த சேவையை தர திட்டம் வைத்துள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது.

சிலர் Twitter பயன்படுத்திக்கொண்டு இருப்பார்கள் தற்போது Google Buzz ம் பயன்படுத்த வேண்டும் என்றால் அதிலும் செய்திகள் பதிவு செய்யணும் Google Buzz லும் பதிவு செய்ய வேண்டும் என்றால் எரிச்சலாக இருக்கும், இதற்க்கு நீங்கள் Twitter கணக்கை Google Buzz ல் சேர்த்து விட்டால் நீங்கள் Twitter ல் என்ன பதிவு செய்தாலும் அது Google Buzz லும் பதிவாகிவிடும், இரண்டு வேலை ஆகாது. ஆனால் நீங்கள் அதிகளவில் செய்திகளை பதிவு செய்பவராக இருந்தால் இது உங்களை பின்தொடர்பவர்களை எரிச்சலடைய செய்யலாம்.

இதே போல Google Buzz ல் பதியும் செய்திகளை Twitter ல் காட்ட வேண்டும் என்றால் http://reader2twitter.appspot.com/buzz தளத்திற்கு சென்று இணைத்துக்கொள்ளலாம்.

உங்கள் Google Buzz ல் உங்களுக்கு எரிச்சல் வரும்படியோ அல்லது பிடிக்காத விஷயங்கள் விவாதங்கள் மற்றவர்களால் நடத்தப்பட்டாலோ, விருப்பம் இல்லை என்றால் அதை Mute (This post) செய்வதன் மூலம் அதை மறைய செய்து விடலாம்.

Google Buzz மீதான சில விமர்சனங்கள்

Google Buzz அப்படியே Facebook ஐ காப்பி அடித்து அமைக்கப்பட்டுள்ளது, கூகிள் போன்ற திறமையான நிறுவனம் இதைப்போன்று செய்வது வருத்தம் அளிக்கிறது.

இது மின்னஞ்சலின் உள்ளேயே இருப்பது சிலருக்கு பிடிக்கவில்லை, தனித்தளமாக இருப்பதையே விரும்புகிறார்கள் (Twitter Facebook போல). விரைவில் Twitter ஐ கூகிள் வாங்கவேண்டும் என்பதும் இவர்களை போன்றவர்களது விருப்பம்.

SPAM கமெண்ட்ஸ் பிரச்சனை பற்றி அதிகளவில் கூகிள் க்கு புகார் வந்துள்ளது.

துவக்கப்பட்ட போது தானியங்கியாக (contact list ல் உள்ள) பலரை அனுமதி இல்லாமல் கூகிள் பின் தொடர்பவர்களாக செய்தது பலரை கடுப்படித்து விட்டது, ஆனால் இதை முன்பே கூறியபடி உடனே சரி செய்து விட்டது.

இவை இல்லாமல் பல குற்றசாட்டுகள் Google Buzz மீது சாட்டப்பட்டுள்ளது, அதை சரி செய்யும் முயற்சியில் கூகிள் இறங்கியுள்ளது.

உங்களுக்கு Google Buzz மின்னஞ்சல் Inbox பகுதியில் இருப்பது பிடிக்கவில்லை என்றால் அதை எப்போது வேண்டும் என்றாலும் Settings -->> Buzz சென்று மறைய செய்யலாம் அல்லது முற்றிலும் நீக்கலாம். உங்களுக்கு விருப்பமில்லை என்றால் மறைய செய்யும் வழியை பயன்படுத்தும்படி நான் பரிந்துரைக்கிறேன். தேவைப்பட்டால் அல்லது மனது மாறினால் மீண்டும் பயன்படுத்த எளிதாக இருக்கும்.

நான் Facebook Twitter போன்றவற்றை என் இடுகைகளை பகிர்ந்துகொள்ள மட்டுமே பயன்படுத்துகிறேன், அதில் என் எண்ணங்களை தெரிவித்து பின் அதற்க்கு பதில் அளித்து மேலும் பதில், பதில் என்று செல்வது என் பொறுமையை சோதிப்பதால் அதில் எனக்கு முற்றிலும் ஆர்வம் இல்லை. ஆனால் கூகிள் மின்னஞ்சல் நான் அதிகம் பயன்படுத்துகிறேன் அதனால் எனக்கு அதனுடன் இணைந்து இருக்கும் Goolge Buzz பயன்படுத்த மிக எளிதாக உள்ளது. எனவே தற்போது அவ்வப்போது Google Buzz ல் என் எண்ணங்களை தெரிவித்து வருகிறேன். பின் தொடர விரும்பினால் என்னுடைய Google Buzz ID.

குறுகிய காலத்தில் பல மில்லியன் பயனாளர்களை பெற்றுள்ள Google Buzz சில விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வழக்கம் போல தன் திறமையை நிரூபிக்கும் என்று நம்புகிறேன்.

கொசுறு

தவை காற்று வரட்டும் கேமரா வரட்டும் என்றெல்லாம் படித்து சலித்து இருப்பீர்கள். இதுவும் அதைப்போல ஒன்று தான் ஆனால் வேற மாதிரி. இப்பெல்லாம் எங்க பார்த்தாலும் கேமராவை வைத்துடுறாங்க மனுஷன் நிம்மதியா கழிவறை கூட போகமுடியாது போல அந்த அளவிற்கு எங்க பார்த்தாலும் கேமராவை மறைய வைத்து திருட்டுத்தனமா வீடியோ எடுத்து இணையத்துல போட்டுடறாணுக!

இது என்னன்னா பள்ளியில் பசங்க என்ன பண்ணுறாங்கன்னு பார்க்க அவங்க லேப்டாப்பில் உள்ள கேமராவை வேறு இடத்தில் இருந்து பார்க்கும் படியான மென்பொருளை நிறுவி விடுகிறார்கள். இது தெரியாமல் பசங்க கேமரா முன்னாடியே ஆட்டம் போட்டுட்டு இருந்தால் கபால்னு பிடித்து விடுறாங்க. சரி பசங்களுக்கு தானே இந்தப்பிரச்சனை நமக்கு என்ன! ஃப்ரீயா விடு மாமே! என்று கூறாதீர்கள். இதைப்போல மென்பொருளை நமது லேப்டாப்பிலும் ஒருவரால் நிறுவ முடியும் என்பதே அதிர்ச்சி அளிக்கிறது. நீங்க அது தெரியாம கிளுகிளுப்பா இருந்தா அதை நீங்கள் அறியாமல் உலகமே பார்த்து விடும்.

இது பற்றி விரிவான இடுகைக்கு இங்கே செல்லவும்.

நான் பொதுவாக அனைத்து வகையான பதிவுகளும் எழுதுவேன் சுதந்திர இலவச மென்பொருள் தள ஷிர்டி சாய்தாசன் அவர்கள் தொழில்நுட்ப வலைபதிவுகள் பகுதியில் என் தளத்தையும் அவ்வப்போது குறிப்பிட்டு வருவது எனக்கு தொழில்நுட்ப பதிவுகள் எழுதுவதின் மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது. என் தளத்தின் பெயரையும் குறிப்பிட்டு உற்சாகப்படுத்தியதற்கு என் நன்றியை இதில் தெரிவித்துக்கொள்கிறேன்.

0 comments

Post a Comment

ACS COMPUTER CENTER

ACS COMPUTER CENTER
ACS COMPUTER CENTER

Buttons

FLAG COUNTER

free counters

My Readers

free counters

பாடத் தலைப்புக்கள்

Time now?

Visitors

Website counter

தொடர் குறிப்புக்கள்