Add your E-mail address to receive updates

Enter your email address:

Delivered by FeedBurner

Showing posts with label WINDOWS. Show all posts
Showing posts with label WINDOWS. Show all posts

யுஎஸ்பி-யில் கொப்பி செய்வதை தடுக்கவும், அனுமதிக்கவும் செய்வோம்  

Posted by www.acscomputercenter.blogspot.com in

யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் தடுக்க:

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000001

இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியில் இருந்து உங்களுக்கு தெரியாமல் யுஎஸ்பி-யில் காப்பி எடுக்கமுடியாது.

யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்க:

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000000

இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனிமேல் உங்கள் கணினி யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்கும்.

FREE wonderful fonts  

Posted by www.acscomputercenter.blogspot.com in



விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் எழுத்துவகைகளுடன், நமக்குப் பிடித்த எழுத்து வகைகளையும் சேர்த்து வைத்தே நாம் பயன்படுத்துகிறோம். வெளியே இருந்து கிடைக்கும் சில எழுத்து வகைககள் சில நமக்குப் பிடித்துப் போகின்றன.


சில வேளைகளின், அவற்றின் அடிப்படையில், சில கோணங்களில் அல்லது வளைவுகளில் எழுத்துக்கள் இருந்தால், நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறோம். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான பாண்ட் வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.


1. http://www.abstractfonts.com/:

இங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.


2. http://freefonts.co.in/:


விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.

3. http://www.dafont.com/:


பத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க  

Posted by www.acscomputercenter.blogspot.com in

உங்கள் போல்டரை Send To மெனுவில் சேர்க்க நீங்கள் செய்ய வேண்டியது :


முதலில் மை கம்பியூட்டரைத் திறந்து கொள்ளுங்கள். அங்கு Tools மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். தோன்றும் டயலொக் பொக்ஸில் View டேபில் க்ளிக் செய்து Show hidden files and folders என்பதைத் தெரிவு நிலைக்கு மாற்றுங்கள்.


பின்னர் மை கம்பியூட்டர் விண்டோவில் (C:) ட்ரைவில் உள்ள Documents and Settings போல்டரைத் திறந்து உங்கள் User Account க்குரிய போல்டரையும் திறந்து கொள்ளுங்கள். அங்கு Send To எனும் போல்டரைக் காணலாம்.


பின்னர் Send To போல்டரைத் திறந்து அதனுள் File - New - Shortcut ஊடாக நீங்கள் Send To மெனுCல் சேர்க்க விரும்பும் போல்டருக்கு ஒரு Shortcut ஐ உருவாக்கிக் கொள்ளுங்கள். இப்போது எதேனுமொரு பைலின் மேல் ரைட் க்ளிக் செய்து Send To தெரிவு செய்ய அங்கு நீங்கள் Shortcut உருவாக்கிய போல்டரையும் காணலாம்

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்  

Posted by www.acscomputercenter.blogspot.com in

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.

விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?  

Posted by www.acscomputercenter.blogspot.com in

நாம் ஏதாவது புது மேன்தொகுப்பையோ, அல்லது புது வன் பொருட்களையோ கணினியில் நிறுவும் போது, அது அந்த கணினியோடு ஒத்துப் போகாததால், கணினியே செயல் இழந்து விட வாய்ப்புண்டு.

இந்த மாதிரி சமயங்களில், கணினியை Format செய்து மீண்டும் நிறுவுவதைத் (Install) தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. அதற்காக உருவாக்கப் பட்டது தான், System Restore .

இது ஒரு கணினியை அதன் முந்தய நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது.

எனக்கு தெரிந்து இது விண்டோஸ் me (Windows 98, Millennium edition ) பதிப்பில் தான் முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.

கணினியில் அடிக்கடி புது தொகுப்புகள் நிறுவுவதும், எடுப்பதும் ஆக இருப்பவர்க்கு இது ஒரு வரப் பிரசாதம். MS ஆபீஸ் தொகுப்புகளில் "undo " செய்வது போல் முழு கணினியையே undo செய்து விடலாம், பழைய நிலைமைக்கு

நமது கணினியில் இதை அணுக

Start--> All Programs--> Accessories--> System Tools--> System Restore.


செல்லவும். இதற்கு அதிகமாக இடம் ஒதுக்கினால், நிறைய Restore point களை அதனால் சேமிக்க முடியும் .

பொதுவாக ஏதாவது பெரிய தொகுப்புகளை நிறுவும் போது விண்டோஸ் அதுவாக Restore point ஐ உருவாக்கும். இருந்தாலும், சந்தேகம் இருந்தால், நீங்களாகவும் உருவாக்கலாம்.

நீங்கள் மறந்து விடவும் வாய்ப்புண்டு, அதற்காகவே ஒவ்வொரு புது மேன்தொகுப்பை நிறுவும் போது Restore point ஐ உருவாக்குவதற்கு இந்த சிறிய மேன்தொகுப்பு பயன்படுகிறது.

பைல்களை விரைவாகத் தேடிப் பெற.....  

Posted by www.acscomputercenter.blogspot.com in



கணினியில் தொலைத்து விட்ட உங்கள் பைல்களைத் தேடிப் பெற Search for files or folders எனும் வசதி விண்டோஸில் இருப்பதை நீங்கள் அறிவீர்கள்.

இதன் மூலம் ஒரு பைலை இலகுவாகத் தேடிப் பெறலாம். இங்கு உங்கள் பைல்களைத் தேடுவதற்கு அந்த பைல் வகைக்குரிய எக்ஸ்டென்சனை வழங்குவதன் மூலம் மேலும் விரைவாகத் தேடிப் பெறலாம். உதாரணமாக test எனும் பெயர் கொண்ட ஒரு வர்ட் பைலைத் தேட Search விண்டோவில் All or part of the file name எனுமிடத்தில் test.doc என வழங்க வேண்டும்.

எல்லா வேர்ட் பைல்களையும் தேடிப் பெற *.doc என வழங்கவும். அவ்வாறே எக்ஸல் பைலாயின் *.xls எனவும் பீடிஎப் பைலாயின் *.pdf எனவும் ஒரு exe பைலாயின் *.exe எனவும் வழங்க வேண்டும்.

T யில் ஆரம்பிக்கும் ஒரு வர்ட் பைலைத் தேட t*.doc என டைப் செய்யுங்கள். அதேபோல் *e.doc என வழங்க e யில் முடிவுறும் அனைத்து வர்ட் பைல்களையும் முடிவாகப் பெறலாம்..

இங்கு (*) குறியீட்டின் பிரயோகத்தை வைல்ட் காட் (wild card) எனப்படுகிறது. மேலும் ஒரு பைலை கணினி முழுவதும் தேடாமல் உரிய ட்ரைவில் மட்டுமே தேடச் செய்வதன் மூலம் நேரத்தை மேலும் மீதப்படுத்தலாம்

ACS COMPUTER CENTER

ACS COMPUTER CENTER
ACS COMPUTER CENTER

Buttons

FLAG COUNTER

free counters

My Readers

free counters

பாடத் தலைப்புக்கள்

Time now?

Visitors

Website counter