undefined
FREE wonderful fonts
Posted by www.acscomputercenter.blogspot.com in WINDOWS
விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் எழுத்துவகைகளுடன், நமக்குப் பிடித்த எழுத்து வகைகளையும் சேர்த்து வைத்தே நாம் பயன்படுத்துகிறோம். வெளியே இருந்து கிடைக்கும் சில எழுத்து வகைககள் சில நமக்குப் பிடித்துப் போகின்றன.
சில வேளைகளின், அவற்றின் அடிப்படையில், சில கோணங்களில் அல்லது வளைவுகளில் எழுத்துக்கள் இருந்தால், நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறோம். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான பாண்ட் வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.
1. http://www.abstractfonts.com/:
இங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.
2. http://freefonts.co.in/:
விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.
3. http://www.dafont.com/:
பத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.