undefined
வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
Posted by www.acscomputercenter.blogspot.com in HARDWARE
சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது Computer ஐ திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும் AUDIO_TS ஆகிய கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள்.
உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள்.
அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.
Dropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.
Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.
Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.