undefined
உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.
Posted by www.acscomputercenter.blogspot.com
உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்
புகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு
உதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.
இணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை
உருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்
புகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.
இணையதளமுகவ்ரி : http://3d-pack.com
இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை
படம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு
வேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை
தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்
நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை
வைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்
“ Create 3d-box” என்ற பட்டனை அழுத்தவும்.சில
நிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்
இனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து
எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.
எல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த “jpg,png,
gif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்
கணினியில் சேமித்துகொள்ளலாம்.