Add your E-mail address to receive updates

Enter your email address:

Delivered by FeedBurner

வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க  

Posted by www.acscomputercenter.blogspot.com in

உங்கள் வன் தட்டுக்களை சீராக பராமரிக்க இந்த மென்பொருள் மாதம் ஒரு முறை டிபிராக் செய்தால் நன்றாக் வேலை செய்யும். உங்கள் வன் தட்டில் Bad Sector உருவாகமால் தடுக்க முடியும்.
இங்கே சென்று இந்த ஸெப்ட் வயார் ஐ டொவ்ன் லோட் செய்க

http://www.oo-software.com/home/en/download/archive/index.php?product=oodefrag11pro


இங்கு சென்று உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண். நீங்கள் வசிக்கும் நாடு கொடுத்தால் போதும் அடுத்த ஐந்து நிமிடங்களுக்குள்ளாக உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு மென்பொருளின் உரிமம் எண் உங்களுக்கு வழங்கப்பட்டு விடும்.

உங்கள் கணினியை சுத்தம் செய்ய - Glary Utilities  

Posted by www.acscomputercenter.blogspot.com in



வீட்டில் தான் குப்பை சேரும் என்பதில்லை. உங்கள் கணினியிலும் அதே போல் தற்காலிக கோப்புகளும் (Temporary files), கோப்புகளின் துண்டாக்கலும் (fragmentation) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.

கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடை வேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நலம்.

நிறைய மக்களுக்கு தெரிந்தது CCleaner தொகுப்பு தான்.

அதே போல் இன்னொரு தொகுப்பு தான் இது.

மேற் சொன்ன வேலைகள் மட்டுமல்லாமல், தொகுப்புகளை uninstall செய்வது, மற்றும் startup entry களை நீக்குவது போன்றவற்றை செய்து, உங்கள் கணினியை சுத்தம் செய்யலாம்.

http://www.glaryutilities.com/

உங்கள் புகைப்படத்தை சில நிமிடங்களில் 3D-யாக மாற்றலாம்.  

Posted by www.acscomputercenter.blogspot.com


உங்கள் புகைப்படம் அல்லது உங்கள் நிறுவன பொருளின்
புகைப்படத்தை 3D உருவாக்க உங்களுக்கு விருப்பமா உங்களுக்கு
உதவுவதற்கென்றே ஒரு இணையதளம் வந்துள்ளது இதைப்பற்றி
தான் இந்த பதிவு.


இணையதளத்தில் அதுவும் சில நிமிடங்களில் எந்த மென்பொருள்
துணையும் இல்லாமல் நாமாகவே 3D -ல் உங்கள் புகைப்படத்தை
உருவாக்கலாம். இதற்கென்று உள்ள இந்ததளம் தான் உங்கள்
புகைப்படத்தை 3D -யாக மாற்றி கொடுக்கிறது.

இணையதளமுகவ்ரி : http://3d-pack.com

இந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் புகைப்படத்தை
படம் 1-ல் காட்டியபடி அப்லோட் செய்யவும்.அடுத்து உங்களுக்கு
வேண்டுமென்றால் முன்பக்கம்,பின்பக்கம் என புகைப்படத்தை
தேர்ந்தெடுக்கவும். ஒரு புகைப்படம் கூட வைத்துக்கொள்ளலாம்

நாம் நம் சங்கத்தலைவர் பில்கேட்ஸ்-ன் புகைப்படத்தை
வைத்துள்ளோம். படங்களை தேர்ந்தெடுத்து முடித்த பின்
“ Create 3d-box” என்ற பட்டனை அழுத்தவும்.சில
நிமிடங்களில் நாம் கொடுத்த படம் 3D- யாக மாறிவிடும்
இனி நீங்கள் படத்தில் மேல் உங்கள் மவுஸ்-ஐ வைத்து
எந்த பக்கத்திற்கு வேண்டுமானாலும் திருப்பிக்கொள்ளலாம்.

எல்லாம் சரியாக வைத்தவுடன் உங்கள் புகைப்படத்த “jpg,png,
gif என எந்த பார்மெட்டில் வேண்டுமானாலும் உங்கள்
கணினியில் சேமித்துகொள்ளலாம்.

You Tube ல் பதிவிறக்கம் செய்வதற்கு  

Posted by www.acscomputercenter.blogspot.com in


நீ்ங்கள் You Tube ல் பதிவிறக்கம் செய்வதற்கு இந்த வெப் ஸைட்டுக்குச் சென்று

http://netvideohunter.com/




நடைமுறைகளைப் பின்பற்றவும்

உடனே ஆகும்.

Virus இருக்கா? இல்லையா?  

Posted by www.acscomputercenter.blogspot.com in

உங்களிடம் சந்தேகப்படும் வகையில் ஏதேனும் கோப்புகள் இருந்தால் (அதாவது வைரசு தொற்றி இருக்குமோ என்ற வகையில்) அவற்றை வைரசுடோட்டல் என்னும் இந்த தளத்தில் ஏற்றிச் சோதித்துப் பாருங்கள்.

இந்தத் தளத்தில் இலவசமாகவே மொத்தம் 32 வைரசு எதிர்ப்பான்களைக் கொண்டு இந்த ஏற்றப்பட்ட கோப்புகளை சோதித்து உடனே முடிவுகளை அறிவித்துவிடுகிறார்கள். உங்கள் சந்தேகமும் தெளிவாகிவிடும்.

இலவசச் சேவை இணையத்தில் இங்கே கிடைக்கும்.

http://www.virustotal.com/

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்  

Posted by www.acscomputercenter.blogspot.com in

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், எனது கணினியைத் துவக்குவதற்கு 10 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டி இருந்தது. பின் சில நெறிமுறைகளைப் பின்பற்றிய பிறகு ஒரே நிமிடத்துக்குள்ளாகவே Start ஆகிவிடுகிறது.

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.
பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.

9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :
ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.

விண்டோஸ் இல் System Restore என்பது என்ன ?  

Posted by www.acscomputercenter.blogspot.com in

நாம் ஏதாவது புது மேன்தொகுப்பையோ, அல்லது புது வன் பொருட்களையோ கணினியில் நிறுவும் போது, அது அந்த கணினியோடு ஒத்துப் போகாததால், கணினியே செயல் இழந்து விட வாய்ப்புண்டு.

இந்த மாதிரி சமயங்களில், கணினியை Format செய்து மீண்டும் நிறுவுவதைத் (Install) தவிர வேறு வழி இல்லாமல் இருந்தது. அதற்காக உருவாக்கப் பட்டது தான், System Restore .

இது ஒரு கணினியை அதன் முந்தய நல்ல நிலைமைக்கு கொண்டு செல்கிறது.

எனக்கு தெரிந்து இது விண்டோஸ் me (Windows 98, Millennium edition ) பதிப்பில் தான் முதன் முறையாக அறிமுகப் படுத்தப் பட்டது.

கணினியில் அடிக்கடி புது தொகுப்புகள் நிறுவுவதும், எடுப்பதும் ஆக இருப்பவர்க்கு இது ஒரு வரப் பிரசாதம். MS ஆபீஸ் தொகுப்புகளில் "undo " செய்வது போல் முழு கணினியையே undo செய்து விடலாம், பழைய நிலைமைக்கு

நமது கணினியில் இதை அணுக

Start--> All Programs--> Accessories--> System Tools--> System Restore.


செல்லவும். இதற்கு அதிகமாக இடம் ஒதுக்கினால், நிறைய Restore point களை அதனால் சேமிக்க முடியும் .

பொதுவாக ஏதாவது பெரிய தொகுப்புகளை நிறுவும் போது விண்டோஸ் அதுவாக Restore point ஐ உருவாக்கும். இருந்தாலும், சந்தேகம் இருந்தால், நீங்களாகவும் உருவாக்கலாம்.

நீங்கள் மறந்து விடவும் வாய்ப்புண்டு, அதற்காகவே ஒவ்வொரு புது மேன்தொகுப்பை நிறுவும் போது Restore point ஐ உருவாக்குவதற்கு இந்த சிறிய மேன்தொகுப்பு பயன்படுகிறது.

ACS COMPUTER CENTER

ACS COMPUTER CENTER
ACS COMPUTER CENTER

Buttons

FLAG COUNTER

free counters

My Readers

free counters

பாடத் தலைப்புக்கள்

Time now?

Visitors

Website counter