உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள
Posted by www.acscomputercenter.blogspot.com in HARDWARE
வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed எனும் சிறிய ஸொப்ட் வயார் ஐ இந்த முகவரிக்கு சென்று டொவ்ன் லோட் செய்யவும்
http://www.snapfiles.com/get/rkdisk.html
தரவிறக்கி இயக்கி பாருங்கள் இரண்டு நிமிடங்களில் உங்கள் வன் தட்டின் வேகத்தை விளக்கி விடும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும். வன் தட்டின் வேகம் சோதிக்கும் போது வேறு புரோகிராம்கள் இயங்காமல் பார்த்துக்கொள்ளவும்.
இனி நீங்கள் டெஸ்க்டாப்பின் இடதுபுறம் இருக்கும் Start பட்டன் கிளிக்கி அதில் Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் sysedit.exe என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும்.
இபோது உங்களுக்கு புதிதாக ஒரு விண்டோ திறந்து அதன் மேலே நான்கு விண்டோக்கள் இருக்கும் அதில் நீங்கள் C:\windows\system.ini எனகிற விண்டோவை கண்டுபிடிக்கவும் அநேகமாக கடைசி விண்டோவாக இருக்கும், என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா சரி இதில் நாம் புதிதாக ஒரு வார்த்தையை சேர்க்க போகிறோம் அந்த விண்டோவில் [386enh] என்கிற வரியை கண்டுபிடியுங்கள் அதன் கீழே அடுத்த வரியாக Irq14=4096 (அதாவது Interrupt request) எழுதி சேர்த்து சேமித்து பின் மூடி விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.
இனி கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது மீண்டும் உங்கள் கணினியின் வேகத்தை சோதித்து பாருங்கள் புரியும்.