Add your E-mail address to receive updates

Enter your email address:

Delivered by FeedBurner

உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள  

Posted by www.acscomputercenter.blogspot.com in



வன் தட்டின் வேகம் அதிகரிப்பதன் மூலம் நாம் பைல்கள் இயக்கும் நேரத்தை துரிதப்படுத்தலாம் இதனால் கணினியின் இயக்கத்தில் வித்யாசம் வரும், முதலில் நீங்கள் உங்கள் கணினியின் வன் தட்டு தற்போதைய வேகம் அறிந்துகொள்ள Disk Speed எனும் சிறிய ஸொப்ட் வயார் ஐ இந்த முகவரிக்கு சென்று டொவ்ன் லோட் செய்யவும்

http://www.snapfiles.com/get/rkdisk.html

தரவிறக்கி இயக்கி பாருங்கள் இரண்டு நிமிடங்களில் உங்கள் வன் தட்டின் வேகத்தை விளக்கி விடும் சந்தேகத்திற்கு கீழிருக்கும் படத்தை பாருங்கள் புரியும். வன் தட்டின் வேகம் சோதிக்கும் போது வேறு புரோகிராம்கள் இயங்காமல் பார்த்துக்கொள்ளவும்.




இனி நீங்கள் டெஸ்க்டாப்பின் இடதுபுறம் இருக்கும் Start பட்டன் கிளிக்கி அதில் Run என்பதை தேர்ந்தெடுத்து அதில் sysedit.exe என டைப் செய்து ஒக்கே கொடுக்கவும்.


இபோது உங்களுக்கு புதிதாக ஒரு விண்டோ திறந்து அதன் மேலே நான்கு விண்டோக்கள் இருக்கும் அதில் நீங்கள் C:\windows\system.ini எனகிற விண்டோவை கண்டுபிடிக்கவும் அநேகமாக கடைசி விண்டோவாக இருக்கும், என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா சரி இதில் நாம் புதிதாக ஒரு வார்த்தையை சேர்க்க போகிறோம் அந்த விண்டோவில் [386enh] என்கிற வரியை கண்டுபிடியுங்கள் அதன் கீழே அடுத்த வரியாக Irq14=4096 (அதாவது Interrupt request) எழுதி சேர்த்து சேமித்து பின் மூடி விடுங்கள் சந்தேகத்திற்கு படத்தை பாருங்கள்.



இனி கணினியை ஒரு முறை ரீஸ்டார்ட் செய்யுங்கள் இப்போது மீண்டும் உங்கள் கணினியின் வேகத்தை சோதித்து பாருங்கள் புரியும்.

யுஎஸ்பி-யில் கொப்பி செய்வதை தடுக்கவும், அனுமதிக்கவும் செய்வோம்  

Posted by www.acscomputercenter.blogspot.com in

யுஎஸ்பி-யில் எழுதவிடாமல் தடுக்க:

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000001

இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனி உங்கள் கணினியில் இருந்து உங்களுக்கு தெரியாமல் யுஎஸ்பி-யில் காப்பி எடுக்கமுடியாது.

யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்க:

Windows Registry Editor Version 5.00

[HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\StorageDevicePolicies]
"WriteProtect"=dword:00000000

இதை அப்படியே காப்பி எடுத்து ஒரு நோட்பேட் திறந்து (Windows Key + R then type notepad) பேஸ்ட் செய்யவும் பின்னர் சேமிக்கும் போது உங்களுக்கு புரியும் வகையில் ஒரு பெயர் கொடுத்து எக்ஸ்டென்ஷன் .reg என்பதாக சேமிக்கவும் இனி இதை செயல்படுத்த டபுள் கிளிக் செய்து ஓக்கே கொடுக்கவும் அவ்வளவுதான் இனிமேல் உங்கள் கணினி யுஎஸ்பி-யில் எழுத அனுமதிக்கும்.

கணினியில் இருந்து பீப் ஒலி  

Posted by www.acscomputercenter.blogspot.com in

கணினி ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.




அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டுபிடிக்கலாம்.......

1 , 2 , 3 , முறை- ram அல்லது motherboard

4 , முறை - டைமர் (motherboard ) இனை சரி செய்யவும்

5 , முறை - ப்ராசசரில் சிக்கல்

6 , முறை - key board , key போர்டு கண்ட்ரோல் , key போர்டு கண்ட்ரோல் ஷிப்

7 , முறை - motherboard இல் உள்ள ஜம்பர்கள் சரியாக உள்ளாதா என பார்க்கவும்.

FREE wonderful fonts  

Posted by www.acscomputercenter.blogspot.com in



விண்டோஸ் சிஸ்டத்துடன் வரும் எழுத்துவகைகளுடன், நமக்குப் பிடித்த எழுத்து வகைகளையும் சேர்த்து வைத்தே நாம் பயன்படுத்துகிறோம். வெளியே இருந்து கிடைக்கும் சில எழுத்து வகைககள் சில நமக்குப் பிடித்துப் போகின்றன.


சில வேளைகளின், அவற்றின் அடிப்படையில், சில கோணங்களில் அல்லது வளைவுகளில் எழுத்துக்கள் இருந்தால், நன்றாக இருக்குமே என்று ஆசைப்படுகிறோம். நம் எதிர்பார்ப்பிற்கும் மேலாக, பலவகையான பாண்ட் வகைகள் இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. அந்த தளங்களை இங்கு பார்க்கலாம்.


1. http://www.abstractfonts.com/:

இங்கு 11,849 வகை எழுத்துவகைகள் உள்ளன. இவை வகைப்படுத்தப் பட்டு, பயன்படுத்த விரும்புவோர் எளிதாகக் கண்டறியும் வண்ணம் தரப்பட்டுள்ளன.


2. http://freefonts.co.in/:


விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களுக்கான 12,000 பாண்ட் வகைகள் இங்கு கிடைக்கின்றன. மிக எளிதாகத் தேடிப் பார்த்து, தேர்ந்தெடுத்து பயன்படுத்தும் வகையில் இவை அடுக்கப்பட்டுள்ளன.

3. http://www.dafont.com/:


பத்தாயிரத்திற்கு மேற்பட்ட எழுத்து வகைகள் இருக்கின்றன. இவற்றை சொந்த பயன்பாட்டிற்கு, வர்த்தக ரீதியாக இல்லாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் பயன்படுத்த இவை கிடைக்கின்றன.

World Time, Calendar Creator, Count down, Weather, date & time calculation மற்றும் மேலும் பல வசதிகள்  

Posted by www.acscomputercenter.blogspot.com in

இந்த தளத்தில் World Time, Calendar Creator, Count down, Weather, date & time calculation மற்றும் மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.




இந்த தளத்தில் சர்ச் பாக்ஸில் நமக்கு தேவையான நகரத்தின் பெயரை கொடுத்து தேடினால், அதைப்பற்றிய விவரங்கள், வானிலை தகவல்கள் உடனே கிடைக்கின்றன.




இந்த தளத்தில் நமது நாட்டிற்கு ஏற்ப, நமது தேவைக்கேற்ப நாள்காட்டியை உருவாக்க முடியும், இதில் குறிப்பிட்ட நாட்டிற்கு ஏற்றவாறு விடுமுறை தினங்கள் குறிக்கப்பட்டிருப்பது இதனுடைய தனிச் சிறப்பு.






இதில் Time zone converter மிகவும் பயனுள்ளதாக உள்ளது

வலைத்தள முகவரி http://www.timeanddate.com

வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?  

Posted by www.acscomputercenter.blogspot.com in

சில சமயங்களில் நாம் வீடியோ டிவிடிகளை நமது கணினியின் DVD Drive இல் இட்டபிறகு அதுவாகவே ப்ளேயரை திறக்காமல் இருந்து விடுகிறது. My Computer அல்லது Computer ஐ திறந்து பார்க்கையில் VIDEO_TS மற்றும் AUDIO_TS ஆகிய கோப்புறைகள் மட்டுமே காண்பிக்கப்படுகிறது. இந்நிலையில் நாம் ப்ளேயரை திறந்து பிறகு அந்த குறிப்பிட்ட வீடியோ கோப்பை திறக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.


இது போன்ற வீடியோ டிவிடிகளை ஆட்டோ ப்ளே செய்ய என்ன செய்யலாம்?
My Computer ஐ திறந்து கொள்ளுங்கள்.


உங்களது DVD Drive ஐ வலது க்ளிக் செய்து Properties சென்று கொள்ளுங்கள்.


அங்கு AutoPlay டேபை க்ளிக் செய்யுங்கள்.




Dropdown மெனுவில் DVD Movie என்பதை தேர்வு செய்யுங்கள்.

Select an action to perform என்பதற்கு நேராக உள்ள Radio button ஐ க்ளிக் செய்யுங்கள்.

Play DVD movie using Windows Media Player என்பதை தேர்வு செய்து
OK button ஐ க்ளிக் செய்து விடுங்கள்.

உங்கள் வலைப்பூவின் Rank என்ன?  

Posted by www.acscomputercenter.blogspot.com in


உலகத்தில் பல லட்சக்கணக்கான இணைய தளங்கள் உள்ளன. அதில் நம் வலைத்தளம் / வலைப்பூ (website/blog) எந்த rank-ல் இருக்கிறது என்று அறிந்து கொள்ள Alexa உதவுகிறது. வலைத்தளத்திற்கு வருவோர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே Rank கொடுக்கிறார்கள். மேலும், நமது வலைப்பூவிற்குச் சராசரியாக எத்தனை பேர் வருகிறார்கள், எத்தனை பக்கம் பார்வை இடுகிறார்கள், யாரெல்லாம் உங்கள் வலைப்பூவிற்கு இணைப்பு கொடுத்துள்ளார்கள் போன்ற தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். இந்த தகவல்களை 1 வாரம், 1 மாதம், 6 மாதம், 1 வருடம் எனப் பிரித்து அட்டவணையாக தருவது சிறப்பு.

உங்கள் வலைப்பூவின் Rank அறிந்து கொள்ள, இங்கே செல்லவும்.
http://www.ataraxa.com/?gclid=CLHQle6w6qACFcVS6wodojTBEw

ACS COMPUTER CENTER

ACS COMPUTER CENTER
ACS COMPUTER CENTER

Buttons

FLAG COUNTER

free counters

My Readers

free counters

பாடத் தலைப்புக்கள்

Time now?

Visitors

Website counter